Published : 22 Mar 2024 05:31 AM
Last Updated : 22 Mar 2024 05:31 AM
சென்னை: தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9 இடங்களில் போட்டியிடுகிறது. கடந்த திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியுடன் சேர்த்து 290 விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
டெல்லியில் ஆலோசனை: அதில் கடலூர், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கு அதிக எண்ணிக்கையில் விருப்ப மனுக்கள் வந்திருந்தன.விருப்பு மனுக்கள் அடிப்படையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்செல்வப்பெருந்தகை தலைமை யில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, ஈவிகேஎஸ்.இளங்கோவன், சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்தாலோசித்து ஒரு தொகுதிக்கு 3 பேர் கொண்டஉத்தேச பட்டியலைத் தயாரித்திருந்தனர்.
அப்பட்டியலுடன் கடந்த 20-ம்தேதி செல்வப்பெருந்தகை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.நேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் தலைமையில், கட்சியின் தமிழகத்துக்கான மேலிடப்பார்வையாளர்கள் அஜோய் குமார், சிரிவெல்ல பிரசாத் ஆகியோர் முன்னிலையில், செல்வப்பெருந்தகை மற்றும் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் உத்தேச பட்டியலை அளித்தனர்.
இன்று காலை 10 மணிக்கு: இப்பட்டியல் ராகுல்காந்தி யுடன் இன்று நடைபெறும் கூட்டத்தில் இறுதி செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செல்வப்பெருந்தகை செய்தி யாளர்களிடம் கூறும்போது, வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT