Published : 22 Mar 2024 05:53 AM
Last Updated : 22 Mar 2024 05:53 AM
சென்னை: தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி 27 ஆண், 3 பெண் உட்பட 30 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புப்படி, முதல் கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் மக்கள வைத் தேர்தல் நடைபெறுகிறது. வரும் ஏப்.19-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில், நேற்று முன்தினம் மார்ச் 20-ம்தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு வரை, 20 ஆண்கள், 2 பெண்கள் என 22 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இரண்டாம் நாளான நேற்று காலை 11 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி மாலை 3 மணிக்கு நிறைவுற்றது. அதன் அடிப்படையில், தேர்தல் ஆணையத்தின் தகவல் படி 27 ஆண்கள், 3 பெண்கள் என 30 பேர் நேற்று வரை மனுத்தாக்கல் செய்தி ருந்தனர்.
சென்னையை பொறுத்தவரை, தென்சென்னை தொகுதியில் தாக்கம் கட்சியைச் சேர்ந்த ஒருவரும், மத்திய சென்னையில் சுயேச்சை ஒருவரும் என 2 பேர் மட்டும் மனுத்தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. இன்றும் தொடர்ந்து மனுத்தாக்கல் செய்ய முடியும். நாளை சனி, மறுநாள் ஞாயிற்றுக்கிழமைகளில் மனுத்தாக்கல் இல்லை. தொடர்ந்து திங்கள் முதல் புதன் வரை 3 நாட்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய முடியும்.
மறுநாள் மார்ச் 28-ம் தேதி பரிசீலனை நடைபெறும், 30-ம் தேதிவரை போட்டியிட விரும்பாத வர்கள் மனுக்களை திரும்பப் பெறலாம். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளி யிடப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT