Published : 22 Mar 2024 07:38 AM
Last Updated : 22 Mar 2024 07:38 AM
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-1 நேர்முகத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வரும் 24-ம் தேதி நடத்தப்பட உள்ளதாக சேவா பாரதி அமைப்பின் தமிழ்நாடு இயக்குநர் தன்ராஜ் உமாபதி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சேவா பாரதியின் பாரதி பயிலகம் மற்றும் பி.எல்.ராஜ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் குரூப்-1 நேர்முகத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வரும் 24-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்: இந்த ஆண்டு தமிழக அரசு நடத்திய குருப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள், தங்கள்மனவலிமை மற்றும் அறிவுக்கூர்மையை மேம்படுத்திக் கொள்ள இது நல்ல வாய்ப்பாகும்.
முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் அரசின் உயர் பதவிகளில் பணிபுரியும் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகள், அரசுத் துறைகளில் பல்லாண்டு அனுபவம் வாய்ந்தவர்களைக் கொண்டு இந்த பயிற்சி நடத்தப்படுகிறது.
மேலும், நேர்முகத் தேர்வை பதற்றமின்றி சந்தித்து, வெற்றிபெற மனநல நிபுணரின் ஆலோசனைகளும் வழங்கப்படும். நேர்முகத் தேர்வுக்கான இலவசப் பயிற்சியில் கலந்துகொண்டு பயனடைய விரும்புவோர் contactbharathi57@gmail.com என்ற மின்னஞ்சலில் பதிவு செய்யவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9003242208 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு சேவா பாரதி அமைப்பின் தமிழ்நாடு இயக்குநர் தன்ராஜ் உமாபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT