ஐபிஎல் | வேளச்சேரி - சிந்தாதிரிப்பேட்டை இடையே இன்றும், மார்ச் 26 அன்றும் பாசஞ்சர் சிறப்பு ரயில்

ஐபிஎல் | வேளச்சேரி - சிந்தாதிரிப்பேட்டை இடையே இன்றும், மார்ச் 26 அன்றும் பாசஞ்சர் சிறப்பு ரயில்
Updated on
1 min read

சென்னை: ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ஒட்டி, பயணிகள் வசதிக்காக, வேளச்சேரி - சிந்தாதிரிப்பேட்டை இடையே பாசஞ்சர் சிறப்பு ரயில் மார்ச் 22, 26ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது.

17-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று (மார்ச் 22) தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணியும் மோதுகின்றன. இதையடுத்து, மற்றொரு போட்டி மார்ச் 26-ம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டி முடிந்த பிறகு, பயணிகளின் வசதிக்காக, வேளச்சேரி - சிந்தாதிரிப்பேட்டை இடையே மார்ச் 22, 26 ஆகிய தேதிகளில் பாசஞ்சர் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

வேளச்சேரியில் இருந்து இரவு 10.40, 11.05 மணிக்கு சிறப்பு பாசஞ்சர் சிறப்பு ரயில்கள் புறப்பட்டு, முறையே இரவு 11.15, 11.40 ஆகிய நேரங்களில் சிந்தாதிரிப்பேட்டையை அடையும். சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து இரவு 11.20, 11.45 மணிக்கு சிறப்பு பாசஞ்சர் சிறப்பு ரயில்கள் புறப்பட்டு, முறையே நள்ளிரவு 12.05, 12.30 மணிக்கு வேளச்சேரியை சென்றடையும்.

இந்த ரயில் பெருங்குடி, தரமணி, திருவான்மியூர், இந்திரா நகர், கஸ்தூரிபாய் நகர், கோட்டூர்புரம், பசுமைவழிச் சாலை, மந்தைவெளி, திருமயிலை, முண்டகக்கண்ணி அம்மன் கோயில், கலங்கரைவிளக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் ஆகியநிலையங்களில் நின்று செல்லும்.

இந்தத் தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in