Published : 21 Mar 2024 07:24 PM
Last Updated : 21 Mar 2024 07:24 PM
திருப்பூர்: பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட முன்னாள் ராணுவ வீரர் விநாயகம் என்பவர் 'விவிஐபி' என்ற கட்சி பெயரில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தவர் விநாயகம் என்ற மதுரை விநாயகம். முன்னாள் ராணுவ வீரரான இவர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொள்ளாச்சி தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் மோ.ஷர்மிளாவிடம் ‘வீரோ கே வீர் பார்ட்டி ஆப் இந்தியா’ என்ற கட்சி சார்பில் போட்டியிட வேட்பு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
20 ஆண்டுகள் ராணுவத்தில் ஜாயின்ட் கமிஷன் அதிகாரியாக பணியாற்றியவர், 2016-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். ராணுவ சீருடையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் விநாயகம் கூறும்போது, "இந்திய நாட்டின் எல்லையை பாதுகாத்து வந்த நிலையில் தற்போது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தலில் போட்டியிடுகிறேன். பணம் சம்பாதிப்பதற்காக வரவில்லை.
நான் வெற்றி பெற்றால் பொள்ளாச்சி தொகுதியில் தென்னை விவசாயிகளின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வேன். நீர்நிலைகளை பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT