புதுச்சேரி துணை நிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்பு

சி.பி.ராதாகிருஷ்ணன்
சி.பி.ராதாகிருஷ்ணன்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை இரவு ராஜ்நிவாஸில் பதவியேற்கிறார்.

புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் பொறுப்பை, தெலங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை வகித்து வந்தார். அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்து தனது பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.

தமிழிசைக்கு பதிலாக ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு புதுச்சேரி மாநிலத் துணை நிலை ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தெலங்கானா ஆளுநராக நேற்று அவர் பொறுப்பேற்றார்.

அதையடுத்து, புதுச்சேரிக்கு நாளை தெலங்கானாவில் இருந்து நண்பகலில் விமானத்தில் வரும் ஆளுநர் ராதாகிருஷ்ணன் ராஜ்நிவாஸில் நாளை இரவு துணை நிலை ஆளுநராக பொறுப்பு ஏற்க இருப்பதாகவும், அவருக்கு பதவி பிரமாணத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செய்து வைக்கவுள்ளார் என ராஜ்நிவாஸ் வட்டாரங்களில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in