

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு திமுக சார்பில் வேட்பாளராக ச.முரசொலி (46) அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவரது சொந்த ஊர் தஞ்சாவூர் அருகே உள்ள தென்னங்குடி. தந்தை கே.சண்முக சுந்தரம், தாய் தர்மசம்வர்த்தினி. இவருடைய தாத்தா கந்தசாமி தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியில் இயக்குநராக இருந்தவர். இவரது தந்தை சண்முகசுந்தரம் 1971-ல் தென்னங்குடி ஊராட்சி மன்ற தலைவராகவும், தென்னங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராகவும் இருந்துள்ளார்.
சட்டப் படிப்பு படித்துள்ள முரசொலி, தஞ்சாவூர் ஒன்றியக் குழு உறுப்பினராக இருந்தார். கட்சியில் பொதுக் குழு உறுப்பினராக இருந்துள்ளார். தற்போது தஞ்சாவூர் வடக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். இவருக்கு பொற்செல்வி என்ற மனைவியும், ஆதவன் என்ற மகனும் உள்ளனர்.