

விழுப்புரம்: விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் (தனி) அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவரணி செயலாளர் பாக்கியராஜ் போட்டியிடுகிறார்.
41 வயதாகும் இவர், விழுப்புரம் அருகே காந்தளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர். 1982-ம் வருடம் மே 25-ம் தேதி பிறந்த இவர், பிஎஸ்சி பட்டதாரி ஆவார். சென்னை நட்சத்திர ஹோட்டல்களில் மெயின்டனன்ஸ் பணியின் ஒப்பந்ததாராக உள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவியும் 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளார்.
இவர் தொடக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளராக பணியாற்றி, பின்னர் அதிமுகவில் இணைந்தார். விழுப்புரம் தொகுதியில் களம் காணும் பாக்கியராஜ், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளரான குமர குருவின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.