சிதம்பரம் தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவன் - சிறு குறிப்பு

திருமாவளவன்
திருமாவளவன்
Updated on
1 min read

கடலூர்: திமுக கூட்டணியில், சிதம்பரம் (தனி) தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில், தற்போது மக்களவை உறுப்பினராக உள்ள தொல்.திருமாவளவன் (61) மீண்டும் போட்டியிடுகிறார்.

திருமாவளவன் அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் முதுநிலை குற்றவியல் பயின்றவர். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

திருமணம் செய்து கொள்ளவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான இவர், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் என பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி, தமிழக அரசியல் களத்தில் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இயங்கி வருகிறார். இவர், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 5 முறை போட்டியிட்டு, இரு முறை வெற்றி பெற்றுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in