Published : 21 Mar 2024 02:37 AM
Last Updated : 21 Mar 2024 02:37 AM

கள்ளக்குறிச்சி தொகுதி திமுக தே.மலையரசன் - சிறு குறிப்பு

தே.மலையரசன்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளராக, கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த வியபாரியான தே.மலையரசன் (49) அறிவிக்கப்பட்டுள்ளார்.

முதுநிலைப் பட்டதாரியான இவர், தற்போது தியாகதுருகம் திமுக பேரூர் கழக செயலாளராக உள்ளார்.2006-ம் ஆண்டு கிளைக்கழக செயலாளராக கட்சிப் பணியைத் தொடங்கியவர். ஒன்றியத் துணைச் செயலாளராகவும், மாவட்ட பிரதிநிதி மற்றும் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினராகவும் கட்சிப் பணியாற்றிவுள்ளார்

உள்ளாட்சித் தேர்தலில் 2006 மற்றும் 2016-ல் சிறுநாகலூர் மற்றும் பொறையூர் ஊராட்சி மன்றத் தலைவராகவும் மக்கள் பணியாற்றியவர், தியாக துருகம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கூட்டமைப்பின் தலைவராகவும் செயலாற்றியுள்ளார். தற்போது முதன் முறையாக மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி பெயர் சாந்தி மலையரசன். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x