சேலம் தொகுதி திமுக, அதிமுக வேட்பாளர்கள் - சிறு குறிப்பு

டி.எம்.செல்வகணபதி, பி.விக்னேஷ்
டி.எம்.செல்வகணபதி, பி.விக்னேஷ்
Updated on
1 min read

சேலம்: சேலம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார்.

  • பெயர்: டி.எம்.செல்வகணபதி, வயது: 65
  • கல்வித் தகுதி: எம்ஏ, எல்எல்பி
  • சொந்த ஊர்: சேலம்
  • தொழில்: வழக்கறிஞர்
  • கட்சிப் பதவி: 1991-ல் அதிமுக அரசில் அமைச்சர். 1999-ல் சேலம் எம்பி, 2008-ல் திமுக-வில் இணைவு. திமுக மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர். 2010-ல் திமுக மாநிலங்களவை உறுப்பினர். தற்போது சேலம் மேற்கு மாவட்ட செயலாளர்.
  • குடும்பம்: மனைவி பாப்பு செல்வ கணபதி, மகன்கள் அரவிந்த் கணபதி, அஸ்வின் கணபதி.

சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் பி.விக்னேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

  • பெயர்: பி.விக்னேஷ், வயது: 31
  • கல்வித்தகுதி: பொறியியல் பட்டதாரி
  • சொந்த ஊர்: திண்டமங்கலம், ஓமலூர்.
  • தொழில்: விவசாயம்
  • கட்சிப் பதவி: ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர்.
  • குடும்பம்: தந்தை பரமசிவம் (ஓமலூர் வடக்கு ஒன்றிய அதிமுக அவைத் தலைவர், தாய் தனபாக்கியம் திண்டமங்கலம் ஊராட்சித் தலைவர். மனைவி பிரியா, மகள் ரேஷ்னிகா (1).

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in