

சென்னை: நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் மாத்திரை, மருந்துகளை மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் கிருமித் தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு, சளித் தொற்று, ரத்த உறைதல், வைட்டமின் குறைபாடு உள்ளிட்டபாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 60 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. அந்த மருந்துகளில் பெரும்பாலானவை இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவையாகும். அதன் விவரங்கள் https://cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.