தமிழக மீனவர் எல்லை தாண்டுவதாக புகார்: இலங்கை மீனவர்கள் உண்ணாவிரதம்

யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை மீனவர்கள்.
யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை மீனவர்கள்.
Updated on
1 min read

ராமேசுவரம்: தமிழக விசைப்படகு மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதாக புகார் தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகம் அருகே இலங்கை தமிழ் மீனவர்கள் 2-வது நாளாக நேற்று உண்ணாவிரதப் போராட்டத் தில் ஈடுபட்டனர்.

தமிழக விசைப்படகு மீனவர்கள் கச்சத்தீவு, நெடுந்தீவு, யாழ்ப்பாணம் கடல் பகுதிகளில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பது அதிகரித்து வருவதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங் கையில் உள்ள மீனவர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இலங்கை கடல் பகுதி யில் தமிழக மீனவர்கள் வருவதை தடுத்து நிறுத்தக் கோரி, யாழ்ப் பாணம், மன்னார், முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடந்த ஒரு மாதமாக பல்வேறு போராட்டங் களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி யாழ்ப்பாணம் மருதடி சந்தியிலிருந்து பேரணியாகப் புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகத்துக்கு இலங்கை தமிழ் மீனவர்கள் நேற்று முன்தினம் சென்றனர்.

பின்னர், துணைத் தூதரகம் முன் உண்ணாவிரதப் போராட்டதை தொடங்கினர். உண்ணாவிரதம் இருந்தவர்களை போலீஸார் அங்கிருந்து அகற்றிய தால், தூதரகம் அருகில் உள்ளடான்போஸ்கோ வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தனர். நேற்று 2-வது நாளாகஇலங்கை மீனவர்கள் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதில் யாழ்ப்பாணம் கட லோரப் பகுதி மீனவர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in