Published : 21 Mar 2024 05:31 AM
Last Updated : 21 Mar 2024 05:31 AM

தூத்துக்குடி கடல் பகுதியில் மீன்பிடித்த கேரளா, குமரி மீனவர்கள் 86 பேர் சிறைபிடிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கேரளாவைச் சேர்ந்தவிசைப்படகுகள் இரவு நேரங்களில் இழுவலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்து வருவதாகவும், இதனால் தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மற்றும்நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 11 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு ரோந்து சென்றனர். மன்னார் வளைகுடா பகுதியில், தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத் தில் இருந்து 26 கடல் மைல் தொலைவில் கேரளா மற்றும் குளச்சலைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தனர்.

உடனடியாக தூத்துக்குடி மீனவர்கள் அங்கு விரைந்து சென்று, கேரளாவைச் சேர்ந்தஒரு படகில் இருந்த 13 மீனவர்களையும், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த 5 படகுகளில் இருந்த 73 மீனவர்களையும் சிறைபிடித்த னர். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட் டது.

தொடர்ந்து 6 படகுகள் மற்றும் மீனவர்களை தூத்துக்குடி மீன் பிடித் துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுடன் தூத்துக்குடி கோட்டாட்சியர் பிரபு மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மீனவர்களை விடுவிக்க ஒப்புக் கொண்ட நிலையில், படகுகளை விடுவிக்க மாட்டோம் என்று தூத்துக்குடி மீனவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x