மக்களவைத் தேர்தலில் யாருக்கு வாக்கு? - சசிகலா கருத்து

வி.கே.சசிகலா
வி.கே.சசிகலா
Updated on
1 min read

தஞ்சாவூர்: மத்தியில் இதுவரை ஆட்சி செய்தவர்களில் எந்த ஆட்சி மக்களுக்கு பயன்பட்டதோ, அந்த ஆட்சி மீண்டும் வருவதற்கு வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என வி.கே.சசிகலா தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்பது என்ன என்று எல்லோருக்கும் புரியும். 3 அணியாக பிரிந்துள்ள அதிமுக ஒன்றாக இணைய வாய்ப்பு உள்ளது என்பது எனது அனுமானம். தமிழக அரசு தேர்தலை காரணம்காட்டி எவ்வித ஆக்கப்பூர்வமான செயல்களிலும் ஈடுபடாமல் உள்ளது. எப்படியாவது பொய் சொல்லி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதில்தான் தற்போது திமுக அரசு கவனம் செலுத்தி வருகிறது. 2026 தேர்தல் என்பது எங்களுக்கும் திமுகவுக்கும், நேரடி போட்டியாக இருக்கும்.

அந்த தேர்தலில் நான் யார் என்பதை காட்டுவேன். மத்தியில் எந்த ஆட்சி வரவேண்டும் என்று மக்கள் உணர்ந்து வாக்களிக்க வேண்டும். அதாவது இதுவரை ஆட்சி செய்தவர்களில் எந்த ஆட்சி மக்களுக்கு பயன் பட்டதோ அந்த ஆட்சி வரவேண்டும் என வாக்களிக்க வேண்டும். அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ளது பங்காளி சண்டை. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களும் ஒன்று சேர்ந்து வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஒரே அணியாக போட்டியிட்டு வெற்றி பெற்று, ஆட்சியை பிடிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in