Last Updated : 06 Feb, 2018 09:30 AM

 

Published : 06 Feb 2018 09:30 AM
Last Updated : 06 Feb 2018 09:30 AM

கதை கேளு..

ஸ்

மார்ட் போன்களின் வர வால் வாசிப்பு பழக் கம் குறைந்துவிட்டது. நூலகங்களை தேடிச் செல்பவர்களின் எண்ணிக்கை யும் கணிசமாக இல்லை. பள்ளிகளிலும் நூலகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில் லை. இதனால் வாசிப்பு பழக்கம் குழந்தைகளை விட்டு அகன்று விடுமோ என்ற பரிதவிப்பில் உதயமானதுதான் ‘நூல் கொடை’ அமைப்பு.

பள்ளிகளுக்கு இலவசமாக புத்தகங்களை வழங்குவதற்காக இதை உருவாக்கியவர் மதுரை தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் அர்ச்சனா தெய் வா. இவருக்கு மதுரை கீழச்சந்தைப்பேட்டை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் க. சரவணன் உதவிகரமாக இருக்கிறார்.

பள்ளிகளில் இலவசமாக புத்தகங்களை வழங்குவதற்கு முன் குழந்தைகளுக்கு ஆர்வம் ஏற்படுத்த சுவையான நன்னெறிக் கதைகளை சரவணன் உடல் மொழி அசைவுடன் கூறுகிறார். கதைகளை நாடகமாக்கி நிகழ்த் திக் காட்டுவார். இது குழந்தைகளிடம் அந்தக் கதையை வாசிக் கும் ஆர்வத்தை தூண்டும். அது தான் அவர்கள் எதிர்பார்ப்பதும்.

இதுகுறித்து நூல் கொடை அமைப்பாளர் அர்ச்சனா தெய் வா நம்மிடம் கூறியதாவது: புத் தக வாசிப்பு என்பது ஒரு கலை. பள்ளிகளில் கதை புத்தகங்களை வாசித்தல், மாணவர்களிடம் ஆசிரியர்கள் கதை சொல்வது, ஆசிரியர்களிடம் மாணவர்கள் கதை சொல்வது தற்போது இல்லாமல் போனது. எனவே கதை பேச வேண்டும் என்பதற்காகவே புத்தகங்களை வாசிக்கக் கொடுக்கிறோம். தொடக்கப் பள்ளிகளில் இருந்தே குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் வளரும்போதே வாசிப்பின் மீது ஆர்வம் ஏற்படும். இதற்காகவே நூல் கொடை அமைப்பை ஏற்படுத்தினோம்” என்கிறார் அவர்.

நூல் கொடுப்போம்; நூலகம் அமைப்போம் என்ற கருத்தை மையமாக வைத்து இந்த அமைப்பு செயல்படுகிறது. நண்பர்கள், தன்னார்வலர்களிடம் நன்கொடையாக புத்தகங்களை பெறுகிறார்கள். மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து 75-லிருந்து அதிகபட்சமாக 100 புத்தகங்கள் வரை ஒரு பள்ளிக்கு வழங்குகிறார்கள். 3 மாதத்துக்கு ஒருமுறை படித்த கதைகள் பற்றி கலந்துரையாடுகிறார்கள்.

2016-ல் மதுரை ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தொடங்கிய இந்த திட்டம் தற்போது 12 இடங்களில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு நீண்டிருக்கிறது.

பள்ளி குழந்தைகளிடமிருந்தே வாசிப்பை வளப்படுத்த வேண்டிஇருக்கிறது. வாசிப்பின் சுவை யை ஆரம்பத்திலேயே அவர்கள் உணர்வது காலத்தின் அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x