பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்: இண்டியா கூட்டணி கட்சியினர் கைது @ சேலம்

பிரதமர் மோடியின் சேலம் வருகைக்கு எதிர்ப்புத்  தெரிவித்து கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் கருப்புக் கொடியுடன் போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.
பிரதமர் மோடியின் சேலம் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் கருப்புக் கொடியுடன் போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.
Updated on
1 min read

சேலம்: சேலத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்திய இண்டியா கூட்டணி கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

பிரதமரின் சேலம் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மிக்ஜாம்புயலுக்கு நிவாரண நிதி வழங்காததை கண்டித்தும் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்தது.

இந்நிலையில், பிரதமர் வருகையைக் கண்டித்து, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல், திவிக உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சியினர் நேற்று கருப்புக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் மோகன் தலைமையில் 71 பேர், திவிகவைச் சேர்ந்த 5 பேர், காங்கிரஸ் எஸ்சி-எஸ்டி பிரிவு மாநகரத் தலைவர் ஹரிகரன் தலைமையிலான 12பேரை போலீஸார் கைது செய்தனர்.

அதேபோல, சேலம் கோட்டை மைதானத்தில் விசிக மாவட்டச் செயலாளர் காஜாமொய்தீன் தலைமையில் 19 பேரும், ஐயுஎம்எல் மாவட்டத் தலைவர் சையது மூசாதலைமையில் 7 பேரும் கைதுசெய்யப்பட்டனர். எருமாபாளையம் அண்ணா நகரில் இளைஞர் காங்கிரஸ் மாநிலச் செயலாளர் அருளானந்தன் வீட்டில் 4 பேர் கருப்பு பலூன்கள் மற்றும் ‘கோ பேக் மோடி’ பதாகையுடன் இருப்பதையறிந்த கிச்சிபாளையம் போலீஸார், 5 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in