

சென்னை / விழுப்புரம்: விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான திரவுபதி அம்மன் கோயில் உள்ளது.
இது, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந் தாலும் கூட, பட்டியலின மக்கள், இந்த கோயிலுக்குள் நுழையக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் காலம்காலமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தக் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு சமுதாய மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரண மாக கடந்த ஆண்டு ஜூன் 7-ம் தேதி திரவுபதி அம்மன் கோயிலை வருவாய்த் துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.
பூட்டி சீல் வைக்கப்பட்ட திரவுபதிஅம்மன் கோயிலை, திறந்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்தஒரு தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தனர். இரு தினங்களுக்கு முன் இந்தவழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ராஜி தரப்பில் வழக்கறிஞர் கே.பாலு ஆஜராகி, கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதி்ப்பளித்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள இந்த கோயிலில் தினந்தோறும் பூஜைகளை மேற்கொள்ள நடத்த உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
தேர்தல் நேரத்தில்..: காணொலி காட்சி வாயிலாக ஆஜரான விழுப்புரம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட எஸ்பியும், “மக்களவைத் தேர்தல் நேரம் என்பதால் இந்தக் கோயிலை தற்போது திறந்தால் மீண்டும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட லாம்”என அச்சம் தெரிவித்தனர். அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, “உள்ளூர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சட்டம் - ஒழுங்குக்கு எவ்வித பாதகமும் ஏற்படாத வகையில் நீதிமன் றமே தகுந்த உத்தரவைப் பிறப்பிக் கலாம்”என்றார்.
காவல் துறை தரப்பில் ஆஜரானமாநில அரசு தலைமை குற்றவியல்வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னாவும், “பூஜைகளுக்காக அந்த கோயில் திறக்கப்பட்டால் பாதுகாப்புக்கு போலீஸார் பணியமர்த்தப் படுவர். தற்போதைய சூழலில்கோயிலுக்குள் வேறு யாரும் அனு மதிக்கப்பட மாட்டார்கள்”என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், ‘‘ மேல்பாதி திரவுபதி அம்மன் கோயிலில் தினமும் பூஜைகளை நடத்திக்கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
மேலும், பூஜைகளை மேற் கொள்ள பூசாரி ஒருவரை நியமிக்க வேண்டுமென அறநிலையத்துறை இணை ஆணையருக்கு உத்தர விட்ட நீதிபதி, பூஜைகள் முடிந்த தும் கோயிலை மூடி விட வேண் டும். பூசாரியைத் தவிர்த்து வேறு யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கக் கூடாது. பூஜைக்காக கோயில் திறக்கப் படும் போது சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வண்ணம் போலீஸார் தகுந்த பாதுகாப்புகளை வழங்க வேண்டும். ஏதேனும் அசம் பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால், நீதிமன்றத்தின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு வர வேண்டும். அதுபோல நடந்தால் கோயிலை மூட உத்தரவு பிறப் பிக்கப்படும், என எச்சரித்து, விசார ணையை ஜூன் 10-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
ஆட்சியர் ஆலோசனை: இதையடுத்து மேல்பாதி திரவுபதி அம்மன் கோயிலை திறந்து ஓருகால பூஜை நடத்துவது தொடர்பாக விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் பழனி தலைமை தாங்கினார். எஸ்பி தீபக் ஸ்வாட்ச் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி திரவுபதி அம்மன் கோயிலுக்கு வருவாய்த்துறை அதிகாரிகளால் வைக்கப்பட்டிருந்த சீலை மார்ச் 22-ம் தேதி அகற்றி, இந்து சமய அறநிலையத் துறை நியமிக்கும் பூசாரியை கொண்டு தினமும் காலை நேரத்தில் மட்டும் ஒரு கால பூஜை நடத்துவது; வழிபாடு நடத்த கோயிலுக்குள் பொதுமக்கள் யாரையும் அனுமதிக்காமல் தடைவிதிப்பது என்று முடிவு செய்யப் பட்டது. மேலும், கோயிலை திறக்கும் போது எவ்விதமான சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தயார் நிலையில் இருக்குமாறு காவல்துறைக்கு மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.