Published : 19 Mar 2024 04:06 AM
Last Updated : 19 Mar 2024 04:06 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே காந்தலவாடி கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுவின் சார்பில் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஒன்றிணைந்து செயல்படும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற இயக்கங்கள் வழிகாட்டுதலின்படி ஊராட்சி அளவிலான கூட்ட மைப்பு பிஎல்எப் மூலமாக ஏராள மான வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கிராமப்புறங்களில் செயல்படும் சுய உதவி குழுவினர் பொருளாதார வளர்ச்சி பெற வழிவகை செய்கிறது.
ஆனால் எங்கள் கிராமத்தில் இதுவரை அரசு மூலம் வழங்கப்படும் மாவட்ட அளவில், மாநில அளவில் தேசிய அளவில் ஒதுக்கப்பட்ட நிதியும், ஆதார நிதி, சமுதாய முதலீட்டு நிதி, துயர் குறைப்பு நிதி மற்றும் நலிவுற்ற ஊக்கத் தொகை போன்றவைகள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சென்றடைந்துள்ளதா என அதிகாரிகள் கண்காணிக்க தவறிவிட்டதால் பெரும் தொகை முறைகேடு நடந்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், எந்தவொரு நிதியும் சம்பந்தப்பட்ட குழுக்களுக்கு சென்றடைய வில்லை. இது குறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. போலியாக மகளிர் சுய உதவிக் குழு உருவாக்கி பணத்தை முறைகேடு செய்துள்ளனர்.
முறைகேடு செய்த பணத்தை மீட்டு உரிய குழுக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். மீண்டும் தவறுகள் நடை பெறாமல் இருக்க கிராம அளவிலான கூட்டமைப்பை வெளிப் படையாக்க நிர்வாகத்தை ஊக்கப் படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT