புதுச்சேரியில் தேர்தல் விதிகளை மீறிய ரெஸ்டோ பார்களுக்கு அபராதம் விதிப்பு

புதுச்சேரியில் தேர்தல் விதிகளை மீறிய ரெஸ்டோ பார்களுக்கு அபராதம் விதிப்பு
Updated on
1 min read

புதுச்சேரி: ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம்கொண்டு செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்டதேர்தல் அதிகாரியும், ஆட்சியரு மான குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக குலோத்துங் கன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 2024 ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலுக்கான அட்டவ ணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் அறிவிப் புக்குப் பிறகு, மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின் படி, சோதனை செய்யும் போது, ரூ.50 ஆயிரம் அல்லது ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள சுவரொட்டிகள், தேர்தல் பொருட்கள், மதுபானம், ஆயுதங் கள் அல்லது பரிசுப் பொருட்களை எடுத்துக் சென்றால் பறிமுதல் செய்யப்படும்.

எந்த ஒரு நட்சத்திர பிரச் சாரகரும் ஒரு லட்சம் ரூபாய் வரை கட்சியின் பொருளாளரிடமிருந்து தொகை மற்றும் அதன் இறுதி பயன்பாட்டுக்கான சான்றிதழுடன் எடுத்துச் சென்றால், அது பறிமுதல் செய்யப்படாது. ரூ.10 லட்சத்துக்கு பணமாக வாகனத்தில் இருந்தால், அந்தப் பணம் வருமான வரிச் சட்டங்களின் கீழ் தேவையான நடவடிக்கைக்காக வருமான வரி ஆணையத்திற்கு அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காவல் துறையினர் வெளியிட்டுள்ள வீடியோவில், பொதுமக்கள் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்லாதீர்கள். ஒரு மாதத்துக்கு தீவிர சோதனை இருக்கும். பொதுமக்கள் பணம் பறிமுதல் செய்யப்பட்டாலும், தேர்தல் குழுவிடம் கணக்கு காண்பித்து திரும்பி பெறலாம் என்று தெரிவித்துள்ளனர்.

10 இடங்களில் சோதனைச்சாவடி: புதுவையில் இருந்து மதுபானங் கள் கடத்தி செல்வதை தடுக்க கலால் துறை உத்தரவிட்டுள்ளது. புதுவை எல்லைகளான கணபதி செட்டிகுளம், முள்ளோடை, தவளக் குப்பம், சோரியாங்குப்பம், மடுகரை, மதகடிப்பட்டு, திருக்கனூர், சேதராப்பட்டு, அய்யங்குட்டி பாளையம், கோரி மேடு ஆகிய10 இடங்களில் கலால்துறையினர் சோதனைச்சாவடி அமைத்துள்ளனர். இங்கு பணியாற்ற 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சோதனைசாவடியிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மதுவிற்பனை நேரம் தவறுதல், கடத்தல்உட்பட புகார்களை 0413 2252493 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என கலால்துறை அறிவித்துள்ளது.

ரெஸ்டோ பார்களுக்கு அபராதம்: புதுச்சேரியில் தேர்தல் நன்ன டத்தை விதிகள் அமலில் வந்துள்ள நிலையில் மதுக்கடைகள் இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. ஆனால், ரெஸ்டோ பார்கள் இயங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. இது பற்றி தேர்தல் அதிகாரி குலோத்துங்கனிடம் கேட்டதற்கு, இரவு 10 மணிக்கு மேல் ரெஸ்டோ பார்கள் திறந்தது தொடர்பாக புகார்கள் வந்தன. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. விதி மீறிய ரெஸ்டோ பார்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in