Published : 09 Feb 2018 06:28 PM
Last Updated : 09 Feb 2018 06:28 PM

பிப். 11-ல் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 விஏஓ தேர்வு: 20.7 லட்சம் பேர் எழுதுகிறார்கள்: நடைமுறைகள் அறிவிப்பு

பிப்ரவரி 11 அன்று நடக்கும் ‘தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்’ (tnpsc group-4 exam ) தேர்வில் விஏஓ பணிகளுக்காக இதுவரை தேர்வாணைய வரலாற்றில் இல்லாத அளவுக்கு 20.7 லட்சம் விண்ணப்பதாரர்கள் ஒரே நேரத்தில் தேர்வு எழுத உள்ளனர்.

விஏஓ தேர்வு குறித்த விபரங்களை தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

“1.25 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்களின் பங்களிப்பால் நடை பெறவிருக்கும் மிகப்பெரிய நிகழ்வாக இந்தத் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தேர்வுத் தொடர்பான விவரங்கள் விண்ணப்பிக்கக் கடைசி நாள் : டிச.20- 2017, தேர்வு நாள் 11.02.2018 ( ஞாயிற்றுக்கிழமை) நேரம் காலை 10 மணிமுதல் மதியம் 1-00 மணி வரை. தேர்வுப் பாடங்கள் பொது அறிவு மற்றும் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம்.

மொத்த தேர்வு மையங்கள் 301. பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை. 20,83,152 , தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்ணக 20,69,274 ஆண் தேர்வர்களின் எண்ணிக்கை. 9,41,878 10. பெண் தேர்வர்களின் எண்ணிக்கை 11,27,342, மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 54 12. மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 25,906 , ஆதரவற்ற விதவைகள் எண்ணிக்ணக 7,367, முன்னாள் படைவீரர்கள் எண்ணிக்கை 4,107.

மொத்த தேர்வுக் கூடங்களின் எண்ணிக்கை 6962, தேர்வுக் கூட முதன்மைக் கண்காணிப்பாளர்களின் மொத்த எண்ணிக்கை 6962, பறக்கும் படைகளின் எண்ணிக்கை 685, இணையவழி மூலமாக கண்காணிக்கப்படவுள்ள கூராய்வு தேர்வுக்கூடங்களின் எண்ணிக்ணக 170, சென்னையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்களின் எண்ணிக்ணக 1,60,120 சென்னையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக்கூடங்களின் எண்ணிக்கை 508.

இத்தேர்விலிருந்து புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள கூடுதலான பாதுகாப்பு அம்சங்கள்: தேர்வுமுறையின் மிகப்பெரிய மேம்பாடாக, தேர்வர்களின் பெயர், புகைப்படம், பதிவெண், விருப்பப்பாடம் மற்றும் தேர்வுக்கூடத்தின் பெயர் ஆகிய தனிப்பட்ட விவரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ள தனித்துவ விடைத்தாட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் தவறாக பதிவெண்ணைக் குறிப்பிடும் தேர்வர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த மதிப்பெண் குறைப்பு நடவடிக்கையிலிருந்து விடுவிக்கப்படுவதுடன், இதனால் தேர்வு முடிவுகள் வெளியிடத் தேவையான கால அவகாசம் கணிசமான அளவில் குறையும்.

நுழைவுச்சீட்டில் தெரிவித்துள்ளபடி, தேர்வர்கள் வினாத்தாளில் விடையினை குறித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது. தேர்வுத்தாளில் விடையளிக்காமல் விடப்பட்டுள்ள கட்டங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு குறிப்பிடும் வகையில் புதிதாக ஒரு கலம் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு தேர்வு நேரத்திற்குப் பிறகு ஐந்து நிமிட கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை மற்றும் உளவுப்பிரிவினர், கண்காணிப்பினை மேற்கொள்ளவும், எவ்வித சவால்களையும் எதிர்கொள்ளும் பொருட்டும் உச்சகட்ட பாதுகாப்பினை உறுதிசெய்ய முடுக்கிவிடப்பட்டுள்ளது.

தேர்வு நேரத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மூலம் மின்சார வாரியத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வுக் கூடங்களுக்கு தேர்வர்கள் எளிதில் சென்றுவரும் பொருட்டுக் காலை 08.00 மணி முதல் மாலை 03.00 வரை கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.”

தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x