

சென்னை: தமிழ்நாடு சுதந்திர வாடகை வாகன சங்க மாநில பொதுச்செயலாளர் ஜூட் மேத்யூ வெளியிட்ட அறிக்கை: தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. வாடகை வாகனங்களான ஆட்டோ, கால் டாக்ஸி, சுற்றுலா மற்றும் சரக்கு வாகனங்களில் வரும் பயணிகள் எவ்வளவு பணம் கொண்டு வருகிறார்கள், அவர்கள் வாக்காளர்களுக்கு வழங்குவதற்கான பரிசு பொருட்கள் வைத்துள்ளனரா என்பன உள்ளிட்டவை ஓட்டுநர்களுக்கு தெரியாது.
இவ்வாறு தேர்தல் விதிகளை மீறும் வகையில் வாடிக்கையாளர்கள் பயணிக்கும் பட்சத்தில் உடனடி விசாரணைகளை மேற்கொண்டு, ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்களின் வாகனங்களை சிறை பிடிக்காத வண்ணம் செயல்பட வேண்டும். இதற்காக வாடகை வாகன உரிமையாளர்களுக்கு தேர்தல் ஆணையம் தகுந்த வழிமுறைகளை அளிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.