பிரதமர் மோடியை பார்த்து எதிர்க்கட்சிகளுக்கு தோல்வி பயம்: வானதி சீனிவாசன் விமர்சனம்

பிரதமர் மோடியை பார்த்து எதிர்க்கட்சிகளுக்கு தோல்வி பயம்: வானதி சீனிவாசன் விமர்சனம்

Published on

நாமக்கல்: நாமக்கல்லில் தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கத்தின் 46-வது மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பாஜகமகளிர் அணி தேசியத்தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கத்தினர் பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இண்டியா கூட்டணி என உருவாக்கினார்கள். அவர்கள் தேர்தல் நேரத்தில் பிரிந்து நிற்கின்றனர்.

இதற்கு சுயநலமே காரணம். இத்தேர்தலில் மக்கள் நலன், வளர்ச்சி ஒரு புறமும், சுயநலம், லஞ்சம், வாரிசு அரசியல் என்பது இன்னொரு புறமாக உள்ளது. பிரதமர் மோடி நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்கிறார்.

பிரதமரைப் பார்த்து எதிர்க்கட்சியினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. தமிழக பாஜக கூட்டணி குறித்து தேசிய தலைவர்கள் பேசி வருகின்றனர். நாளை (19-ம் தேதி) இறுதி வடிவம் பெறும் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in