Published : 17 Mar 2024 06:02 AM
Last Updated : 17 Mar 2024 06:02 AM

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு செய்தது என்ன?தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபடுவதையும், சித்ரவதைக்கு ஆளா வதையும் தடுத்து நிறுத்தாதது ஏன்? தமிழகத்துக்கு செய்து கொடுத்த சிறப்பு திட்டங்கள் என்ன? என கேட்டு, விஷ்வகுரு என மார்தட்டிக் கொள்ளும் பிரதமர்மவுனகுருவாக இருப்பது ஏன்? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்ப தாவது: கடந்த 1974-ம் ஆண்டு தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்த போது, மத்தியில் இருந்த காங்கிரஸ்அரசால், கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது. அதன் பிறகு பல முறை, மத்திய அரசில், பசையான அமைச்சர் பதவிகளை மட்டும் வாங்கிக் கொண்டு, கச்சத்தீவு விவகாரத்தில் கள்ள மவுனம்மட்டுமே சாதித்துக் கொண்டிருக் கும் திமுகவுக்கு, தேர்தல் காலங் களில் மட்டுமே அதன் ஞாபகம் வருவது விந்தை. கச்சத்தீவு விஷயத்தில் திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதி செய்தது துரோகம்.

மோடி பத்திரமாக மீட்டார்: திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, இலங்கை கடற்படையினரால் 80-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது, தமிழக மீனவர்கள் உயிரைக் காப்பாற்ற திமுக எடுத்த நடவடிக்கை வெறும் மவுனமே. கடந்த 2014-ம் ஆண்டு இலங்கை அரசால் தமிழக மீனவர்களுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட போது, திமுக அன்றும் மவுனமாகத்தான் இருந்தது. அவர்களை பத்திரமாக மீட்டது பிரதமர் மோடி தான்.

மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்கள், உடனுக்குடன் மீட்கப்படுகிறார்கள். ஒட்டுமொத்த பாரத நாடும், நமது மீனவர்களுக்கு உறுதுணையாக நிற்கிறது.

கச்சத்தீவை விட்டுக் கொடுத்து,தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத் தைப் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டு, ஐம்பது ஆண்டுகள் மவுனமாக இருந்து கொண்டு, தேர்தல் நேரத் தில் மட்டும் கச்சத்தீவு குறித்துப் பேசும் ஸ்டாலின் சுயபரிசோதனை செய்ய வேண்டியம் நேரம் இது.

இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x