அதிமுகவிடம் 2 சீட் கேட்கும் பார்வர்டு பிளாக்

அதிமுகவிடம் 2 சீட் கேட்கும் பார்வர்டு பிளாக்
Updated on
1 min read

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சென்னையில் நேற்று சந்தித்த அகில இந்திய பார்வர்டு பிளாக்கட்சி நிர்வாகிகள், மக்களவை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்தியா கூட்டணியில் இருக்கும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய தலைவர் நரேன் சட்டர்ஜி, தேசிய பொதுச் செயலாளர் ஜி.தேவராஜன், தேசிய செயலாளர் ஜி.ஆர்.சிவசங்கர், தமிழக பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை நேற்று சந்தித்தனர்.

பின்னர் தலைமை அலுவலகத்தில் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, அமைப்பு செயலாளர்கள் பி.தங்கமணி, பா.பெஞ்ஜமின் ஆகியோரை சந்தித்து பேசினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கதிரவன்கூறும்போது, தற்போது நடந்த பேச்சுவார்த்தையில் தேனி, ராமநாதபுரம் ஆகிய 2 தொகுதிகளை கேட்டிருக்கிறோம். திமுக நிர்வாகிகளை சந்தித்தவர்களுக்கு எங்களது தலைமை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in