

சென்னை: பொதுமக்கள் தங்கள் நிலம் அல்லது வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள மின்கம்பம், மின்கம்பி, மின்பாதை, மின்மாற்றி மற்றும் மின்சாதனங்களை இடமாற்றம் செய்யக் கோரி தமிழ்நாடு மின்வாரியத்தில் விண்ணப்பிக்கும்போது, மொத்த மதிப்பீட்டுத் தொகையில் 22 சதவீதம் நிர்வாகம் மற்றும் மேற்பார்வைக் கட்டணமாக செலுத்த வேண்டி இருந்தது.
இது பொதுமக்களுக்கு பெரிய சுமையாக இருந்து வந்தது. எனவே, இத்தொகையை குறைக்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், இந்தக் கட்டணத்தை மின்வாரியம் குறைத்துள்ளது.
இதுகுறித்து, மின்வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொதுமக்கள் தங்கள் நிலம் அல்லது வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள மின்கம்பம், மின்கம்பி, மின்பாதை, மின்மாற்றி மற்றும் மின்சாதனங்களை இடமாற்றம் செய்யக்கோரி தமிழ்நாடு மின்வாரியத்தில் விண்ணப்பிக்கும்போது, மொத்த மதிப்பீட்டுத் தொகையில் 22 சதவீதம் நிர்வாகம் மற்றும் மேற்பார்வை கட்டணமாக செலுத்த வேண்டி இருந்தது.
இந்நிலையில், இந்த 22 சதவீத நிர்வாகம் மற்றும் மேற்பார்வை கட்டணத்தை 5 சதவீதமாக குறைப்பதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் செலுத்த வேண்டிய மதிப்பீட்டுத் தொகை வெகுவாகக் குறையும்.