Published : 16 Mar 2024 05:45 AM
Last Updated : 16 Mar 2024 05:45 AM
சென்னை: தடய அறிவியல் துறையில் 29 இளநிலை அறிவியல் அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: குற்ற நிகழ்வுகளில் குற்றவாளிகளை கண்டறிய சேகரிக்கப்படும் சான்றுப் பொருட்களை அறிவியல்ஆய்வு மேற்கொண்டு, நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கஉதவுவது தடய அறிவியல் துறையின் முக்கிய பணி ஆகும். இத்துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 29 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலர் அமுதா, தடய அறிவியல் துறை இயக்குநர் இல.விஜயலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள 29 பேரும் தடய அறிவியல்துறையின் தலைமை ஆய்வகம் மற்றும் வட்டார தடய அறிவியல்ஆய்வகங்களில் பணியமர்த்தப்படுவார்கள். முன்னதாக, கடந்த 2021-ம்ஆண்டு இதே பதவியில் 62 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
தடய அறிவியல் துறையில் பணியாற்றும் தொழில்நுட்ப பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில்,ஆண்டுதோறும் 2 பணியாளர்களுக்கு முதல்வரின் பதக்கம்வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் தடய அறிவியல் துறையை நவீனப்படுத்த தேவையான உபகரணங்கள் வாங்க ரூ.26.72 கோடி நிதிஒதுக்கப்பட்டுள்ளது . இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT