Last Updated : 16 Mar, 2024 06:05 AM

 

Published : 16 Mar 2024 06:05 AM
Last Updated : 16 Mar 2024 06:05 AM

மாநகராட்சியாக காரைக்குடி - நிறைவேறியது நீண்ட கால கோரிக்கை

காரைக்குடி: சிவகங்கை மாவட்டத்தில் காரைக் குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதனுடன் சுற்றியுள்ள 2 பேரூராட்சிகள், 5 ஊராட்சிகள் இணைகின்றன.

ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டமாக இருந்தபோது, 1928-ம் ஆண்டு பேரூராட்சியாக இருந்த காரைக்குடி மூன்றாம் நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்தப் பட்டது. சிவகங்கை மாவட்டமாக பிரிந்த பிறகு 1988-ம் ஆண்டு தேர்வு நிலை நகராட்சியாகவும், 2013-ஆம் ஆண்டு சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப் பட்டது.

13.75 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட காரைக்குடி நகராட் சியில், தற்போது 36 வார்டுகள் உள்ளன. 2011-ம் ஆண்டு மக்கள் தொகையின்படி 1.06 லட்சம் பேர் உள்ளனர். தற்போதைய ஆண்டு வருவாய் ரூ.37.10 கோடிக்கு மேல் உள்ளது. அரசு போக்குவரத்துக் கழகம், பிஎஸ்என்எல் போன்றவற்றின் மண்டல அலுவலகங்கள், ஆவின் நிறுவனம் உள்ளிட்ட முக்கிய அலு வலகங்கள் உள்ளன.

ஏற்கெனவே சிக்ரி, அழகப்பா பல்கலைக்கழகம், அரசு பொறி யியல் கல்லூரி, வேளாண்மை கல்லூரி, சட்டக் கல்லூரி, ரயில்வே சந்திப்பு உள்ளன. டைடல் பார்க், மினி ஸ்டேடியம் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் கல்வி மற்றும் தொழில்நுட்ப நகரமாக காரைக் குடி மாறி உள்ளது. மேலும் இங்கு அடிக்கடி திரைப்படங்கள், சின்னத்திரை தொடர்கள் எடுக் கப்பட்டு வருவதால் திரைப்பட நகரமாகவும் உள்ளது.

காரைக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாரம்பரிய மிக்க செட்டிநாடு வீடுகள் உள்ளன. புவிசார் குறியீடு பெற்ற கண்டாங்கிச் சேலை, பலகாரங்கள், செட்டிநாடு பொருட்கள், செட்டிநாடு உணவு வகைகள் கிடைக்கின்றன. இதனால் வெளிமாநிலங்கள், வெளிநாடு களில் இருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நகரமாகவும் உள்ளது.

தினமும் பல்வேறு காரணங் களுக்காக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். ஏற்கெனவே காரைக்குடியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்த கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் அப்போதைய நகராட்சித் தலைவர் கற்பகம்இளங்கோ தலைமையில் நகராட்சியில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

ஆனால், அதன்பிறகு நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால், நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.

கடந்த ஆண்டு சட்டப்பேர வையில் காரைக்குடி, திருவண் ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித் தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி காரைக்குடி நகராட்சித் தலைவர் முத்துத் துரை தலைமையில் காரைக்குடியை மாநகராட்சியாக்க சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பப் பட்டது. இந்நிலையில் நேற்று மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது.

எந்தெந்த பகுதிகள் இணையும்: காரைக்குடியுடன் கோட்டையூர், கண்டனூர் ஆகிய பேரூராட்சி மற்றும் சங்கராபுரம், கோவிலூர், இலுப்பக்குடி, அரியக்குடி, தளக்காவூர் (மானகிரி) ஆகிய 5 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன.

மேலும் இத்தகைய பகுதிகளை இணைக்கும்போது, காரைக்குடி மக்கள் தொகை 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1.80 லட்சத்தை எட்டும். அதேபோல் ஆண்டு வருவாயும் ரூ.53.67 கோடியாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.

மாநகராட்சியாக்க அறிவிக்கப்பட்டதை அடுத்து, நகராட்சித் தலைவர் முத்துத்துரை, கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சாமி.திராவிடமணி கூறியதாவது:

எங்களது நீண்டநாள் கோரிக்கையைான காரைக்குடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை வரவேற்கிறோம்.

எதிர்காலத்தில் வியாபாரம், தொழில்கள் பெருகி, வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். அரசிடம் இருந்து கூடுதல் நிதி கிடைக்கும். சிறப்புத் திட்டங்களும் அறிவிக்கப்படும்.

புதிதாக இணைக்கப்படும் பகுதிகளுக்கும் மாநகராட்சிக்குரிய அந்தஸ்து கிடைப்பதோடு, அதற்கா ன வசதிகளும் கிடைக்கும். மேலும் செட்டிநாடு பகுதியில் விமானத் தளம் உள்ளதால், அங்கு விமான நிலையமும் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நகராட்சித் தலைவர் முத்துத் துரை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி காரைக்குடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி யதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, கே.என்.நேரு, கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இனிமேல் நகருக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பதோடு, புதிய வளர்ச்சித் திட்டங்களும் அதிக அளவில் மேற்கொள்ளப்படும். நகர் வேகமாக வளர்ச்சி அடையும்.

உழவர் சந்தை பகுதியில் புதிய மாநகராட்சி கட்டிடம் கட்டப்படும். தொழில் வளர்ச்சி ஏற்பட்டு, வேலைவாய்ப்பு அதிகரிக்கும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் மேம்பாலங்கள் கட்டப் படும்.

காரைக்குடியை மாநகராட்சி யாக்கினால் வரி உயரும் என்று எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது கண்டிக்கத் தக்கது. வரி பெரிய அளவில் உயராது. புதிதாக இணைக்கப்படும் 2 பேரூராட்சிகள், 5 ஊராட்சிகளில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவி காலம் முடியும் வரை பதவியில் இருப்பர். இவ்வாறு அவர் கூறினார். ஆணையர் வீரமுத்துக்குமார் உடன் இருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x