புதுவையில் பாரம்பரிய மேரி கட்டிடம் உள்ளாட்சித் துறையிடம் ஒப்படைப்பு

புதிய பொலிவுடன் மேரி கட்டிடம்.
புதிய பொலிவுடன் மேரி கட்டிடம்.
Updated on
1 min read

புதுச்சேரி: பிரதமர் மோடி திறந்து வைத்து 3 ஆண்டுகளுக்கு பிறகு, புதுச்சேரியின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் மேரி கட்டிடம் உள்ளாட்சித் துறையிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

புதுச்சேரி கடற்கரை சாலை யில் இருந்த மேரி கட்டிடம் மிகபழமையான கட்டிடமாக இருந்தது.பாரம்பரிய பிரெஞ்சு கட்டிடப் பாணியில் வடிவமைக்கப்பட்ட இந்த பிரமாண்ட கட்டிடத்தில் புதுச்சேரி நகராட்சி அலுவலகம் இயங்கி வந்தது. நாளடைவில் போதிய பராமரிப்பு இல்லாததால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்தது. புதுவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருந்த இந்தக் கட்டிடத்தை, அதே இடத்தில் பழமை மாறாமல் மீண்டும்கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, கடந்த 2017-ம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், இக்கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் திட்டத்தின் கீழ் புதுச்சேரி திட்ட அமலாக்க முகமை மூலம் ரூ.14.83 கோடியில் கட்டுமானப்பணி தொடங்கியது. சுமார் 690 சதுர மீட்டரில் பிரதான கட்டிடம், தரைத் தளம், முதல் தளம், கருத்தரங்க கூடம், திருமண பதிவு அறை உள்ளிட்டவை பாரம்பரிய பழைய கட்டிடப்பாணியில் கட்டப்பட்டன. இந்த திட்டம் 100 சதவீதம் மத்திய அரசின் நிதியில் செயல் படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2021 பிப்ரவரியில் இக்கட் டிடத்தை திறக்க அப்போதைய காங்கிரஸ் அரசு முடிவு எடுத்தது. ஆனால் அழைப்பிதழில் அப்போ தைய ஆளுநர் கிரண்பேடி பெயர்இல்லை. இதனால் இவ்விழாவை தள்ளிவைக்க கிரண்பேடி உத்தர விட்டார். மத்திய அரசால் நிதி தரப்பட்ட திட்டங்கள், பணிகளை திறக்க மத்திய அரசின் பிரதிநிதிகளை அழைக்க வேண்டும் என்று அனைத்து துறைகளுக்கும் சுற்ற றிக்கை ஆளுநர் மாளிகையில் இருந்து அனுப்பப்பட்டது.

இச்சூழலில் எம்எல்ஏக்கள் ஆதரவை திரும்ப பெற்றதால் பெரும்பான்மை இல்லாதததால் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து மேரி கட்டிடத்தை கடந்த 2021 பிப்ரவரி 25-ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார். பிரதமர் திறந்து வைத்து மூன்று ஆண்டுகளாகியும் எந்த அலுவலகமும் வரவில்லை. ஆளுநர் மாளிகை பழுதடைந்து சீர் செய்யப்பட வேண்டிய நிலையிலுள்ளது. அதனால் மேரி கட்டிடத்தை ஒதுக்க கோரிக்கை வந்ததற்கு எதிர்ப்பு கிளம்பியது.

அதேபோல் முன்பு செயல்பட்ட உள்ளாட்சித்துறையும், சுற்றுலாத் துறையும் மேரி கட்டிடத்தை கேட்டுவந்தன. இதனால் இந்த அலுவலகம் திறக்கப்படாமல் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரதமர் திறந்து வைத்து 3 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் ரங்கசாமி, உள் ளாட்சித்துறையிடம் நேற்று இக்கட்டிடத்தை ஒப்படைத்தார். பின்னர் அவர் இதை சுற்றி பார்த்தார். அமைச்சர் லட்சுமி நாரா யணன் உடன் இருந்தார். இதைத் தொடர்ந்து ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக குடிநீர் கள ஆய்வுக்கான பரிசோதனை சாதனங்களை உள்ளாட்சித் துறையிடம் அளித்தார். இதை உள்ளாட்சித் துறை இயக்குநர் சக்திவேல், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in