

திருப்பூர்: இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சுராஜ் தேசிய போர்ட்டல்தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசியதாவது:
நம் நாடு மிக வேகமாக மாறி வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பின்னரும், அடிப்படை தேவைகளுக்காக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் போராட வேண்டியிருந்தது வேதனையளிக்கிறது.
நம் நாட்டில் 30 கோடிக்கும் அதிகமான எஸ்சி, தலித், பழங்குடியின மக்கள் என நாட்டில் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். அவர்கள்அனைவரும் குடும்ப உறுப்பினர்கள். அவர்களிடம் நாம் பாகுபாடு காட்ட முடியாது. நாட்டை ஒரு குடும்பம் என்றுதான் பார்க்கிறோம். எனவே ஒவ்வொரு குடிமகனும் குடும்ப உறுப்பினர்தான்.
70 ஆண்டுகள் என்பது 3 தலைமுறைகளாகும். இவ்வளவு பெரியகுடும்ப உறுப்பினர்களை விட்டுச்சென்றால் நாம் வளர முடியாது. அவர்கள் முன்வருவதை உறுதிசெய்ய வேண்டும். சுராஜ் போர்ட்டல், அந்த விளிம்புநிலை மக்கள், பின்தங்கியிருப்பவர்களுக்கு கடன் எளிதாக அணுகுவதை உறுதி செய்வதையும், நிதியை எளிதாக அணுகவும் உதவுகிறது. இது வணிகம், கல்வி, ஆரோக்கியம், பல்வேறுசெயல்பாடுகள் தொடங்குவதற் கானது.
ஒவ்வொரு குடிமகனும் கண்ணியமாக, சுயமரியாதையுடன் உழைக்க வேண்டும். சுய சுதந்திரம்,வாழ்வாதாரம் இருந்தால், சுய மரியாதை வரும். அதற்காகவே இத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடிமக்கள் வறுமைக்கோட்டில் இருந்து மீண்டிருப்பது அரசின் சாதனை. பெண்கள் இத்திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய அரசின் காப்பீடு அட்டை, எஸ்.சி. எஸ்.டி. மக்களுக்கான தனிநபர் கடன்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.