இடைநிலை ஆசிரியர் தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பிக்க மார்ச் 20 வரை அவகாசம்

இடைநிலை ஆசிரியர் தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பிக்க மார்ச் 20 வரை அவகாசம்
Updated on
1 min read

சென்னை: இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 20 வரை நீட்டிக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துளளது.

அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பதவியில் 1,768 காலியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் பிப்ரவரி 9-ம் தேதி வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு பிப்ரவரி 14-ம் தேதி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நாளையுடன் (மார்ச் 15) முடிவடைகிறது.

இந்நிலையில் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 20 வரை நீட்டிக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய விரும்பினால் மார்ச் 21 முதல் 23-ம் தேதி மாலை 5 மணி வரை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தை சமர்ப்பித்து தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். செல்போன் எண், மின்னஞ்சல் முகவரியை மாற்றம் செய்ய முடியாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in