Published : 13 Mar 2024 03:09 PM
Last Updated : 13 Mar 2024 03:09 PM

மதுரை மக்களவை தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளராக மீண்டும் களமிறங்கும் சு.வெங்கடேசன்!

சு.வெங்கடேசனே | கோப்புப் படம்

மதுரை: திமுக - காங்கிரஸ் கூட்டணியில், மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் நடப்பு எம்பி சு.வெங்கடேசனே மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என அக்கட்சியினர் தெரிவித்தனர்.

திமுக, காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டியா கூட்டணி’யில் உள்ள மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன. இதில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன. கடந்த 2019 தேர்தலில் மதுரை, கோவை ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதன்படி திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் வேட்பாளராக களமிறங்கிய சு.வெங்கடேசன் வெற்றி பெற்று எம்.பி.யானார்.

இந்நிலையில் வரவுள்ள தேர்தலிலும் அவர் மார்க்சிஸ்ட் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என அக்கட்சியினர் தெரிவித்தனர். இது குறித்து அக்கட்சியினர் கூறிய தாவது: திமுக காங்கிரஸ் கூட்டணி பலத்தோடு, மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி வேட்பாளர், அதிமுக கூட்டணி வேட்பா ளர்களை எதிர்கொள்கிறோம். கட்சியின் மாவட்டக் குழு மூலம் மீண்டும் வேட்பாளராக சு.வெங்கடேசன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில செயற்குழுவுக்கு பரிந்துரைக் கப்படும்.

நாளை சென்னையில் நடைபெறும் மாநில குழுவில் விவாதிக்கப்பட்டு மத்திய குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். டெல்லி கட்சி தலைமையில் இருந்து அறிவிப்பு வெளியாகும். திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளராக கே.பாலபாரதி தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் 3 முறை எம்எல் ஏவாக மக்கள் பணியாற்றியவர்.

இன்றும் மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டம் நடத்தி வருகிறார். எனவே அவர் தேர்வு செய்யப்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி விதிப்படி ஒருவருக்கு 3 முறை வாய்ப்பளிக்கப்படும். அதன்படி மதுரையில் ஏற்கெனவே பி.மோகன் 4 முறை போட்டியிட்டு 2 முறை எம்பி ஆனார். அதே போல சு.வெங்கடே சனுக்கும் 2-வது முறையாக வாய்ப்பளிக்கப்படும் என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x