Published : 13 Mar 2024 08:26 AM
Last Updated : 13 Mar 2024 08:26 AM
தென்காசி: தென்காசியில் பாஜக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அலுவலகத்தைத் திறந்துவைத்து, மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளிதரன் பேசியதாவது:
தமிழக அமைச்சர்கள் 35 பேரில்,11 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்களாக இருக்கின்றனர். செந்தில் பாலாஜி கடந்த 8 மாதங்களாக சிறையில் உள்ளார். அவரை இலாகா இல்லாத அமைச்சராகவைத்து, மக்களின் வரிப்பணத்தில் இருந்து சம்பளம் கொடுத்து வந்தனர்.
திமுக என்பது `ட்ரக் மாஃபியா கழகம்' என்று மாறிவிட்டது. போதைப் பொருள் கடத்தியதாக ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் திமுகவுக்கு நன்கொடை வழங்கியுள்ளார். அப்படியானால், என்னமாதிரியான ஆட்சியை திமுக அரசு வழங்கிக்கொண்டு இருக்கிறது என்பதை மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.
பிரதமர் மோடி அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளார். கோடிக்கணக்கான மக்களுக்கு கழிப்பறைகள், வீடுகள்,தண்ணீர், சாலை உள்ளிட்ட வசதிகளை அவர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் 5-வது இடத்துக்கு இந்தியா முன்னேறி உள்ளது. இவற்றை மையப்படுத்தி பாஜக தேர்தல் பிரச்சாரம் அமையும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT