Published : 12 Feb 2018 08:44 AM
Last Updated : 12 Feb 2018 08:44 AM

சென்னையில் கள ஆய்வு மேற்கொள்ளும் இளம் தலைமுறையினர்: பொதுக் கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? - அறிக்கையை மாநகராட்சி ஆணையரிடம் சமர்ப்பிக்க முடிவு

சென்னையில் பொதுக் கழிப் பறைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து தாகம் அறக்கட்டளையைச் சேர்ந்த இளம் தலைமுறையினர் கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் உள்ள 200 வார்டுகளையும் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத வார்டுகளாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்றும் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பகுதிகள் இருப்பது குறித்தும், அதற்கான காரணங்கள் என்ன, அதை தடுக்கும் வகையில் சென்னையில் உள்ள பொதுக் கழிப் பறைகள் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா, மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் அவை உள்ளதா என்பன குறித்தும் தாகம் அறக்கட்டளையைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் கள ஆய்வில் ஈடுபட்டு வருகின் றனர்.

இதுதொடர்பான கலந்துரையாடல் கூட்டம் மேற்கு மாம் பலத்தில் நேற்று நடைபெற்றது. அதில் தாகம் அறக்கட்டளை நிர்வாகிகள் எஸ்.மீனாட்சி, ஆர்.மகாலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு, கள ஆய்வில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களுடன் கலந்துரையாடினர்.

ஆய்வறிக்கை வெளியீடு

இந்த கலந்துரையாடலின்போது, கள ஆய்வில் ஈடுபட்டோர் தாங்கள் பார்த்த விவரங்களைப் புகைப்பட ஆதாரங்களுடன் விளக்கினர். அந்த விவரங்களைக் கொண்ட ஆய்வறிக்கையை வரும் 15-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

அந்த ஆய்வறிக்கையை சென்னை மாநகராட்சி ஆணையரிடம் சமர்ப்பித்து, உரிய நடவடிக்கை எடுக்கக் கோருவது என்றும் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள் ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x