வாக்குப்பதிவின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்: பிரிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

வாக்குப்பதிவின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்: பிரிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
Updated on
1 min read

சென்னை: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் தேர்தல் பிரிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான ஜெ. ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

சென்னை, ரிப்பன் வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் வாக்குச்சாவடி வாரியாக வழங்கப்பட வேண்டிய பொருட்கள், வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் பெற்றுக் கொள்ள வேண்டிய பொருட்கள் குறித்தும், வாக்குச்சாவடிக்குரிய பணியாளர்களின் நியமன ஆணைகளை வட்டாட்சியரிடமிருந்து பெற்றுக் கொள்ளுதல், வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்துக் கொள்ளுதல் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

குறிப்பாக வாக்குப்பதிவு முந்தைய நாளன்று இரவு அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்களின் வருகை, தேவையான வாக்குப்பதிவு பொருட்களின் இருப்பு, வாக்குச்சாவடிக்கு தேவையான அடிப்படை வசதிகள், நுண் பார்வையாளர்கள் உள்ளிட்டோரின் வருகையை உறுதி செய்தல் உள்ளிட்டவை குறித்தும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்களும் மாநகராட்சி துணைஆணையாளர்களுமான எம்.பி.அமித், கே.ஜெ.பிரவீன் குமார், கட்டா ரவி தேஜா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in