பரந்தூர் விமான நிலையத்துக்காக சிறுவள்ளூர் கிராமத்தில் 43.34 ஏக்கர் நிலம் எடுப்பு: ஆட்சேபணை தெரிவிக்க அவகாசம்

பரந்தூர் விமான நிலையத்துக்காக சிறுவள்ளூர் கிராமத்தில் 43.34 ஏக்கர் நிலம் எடுப்பு: ஆட்சேபணை தெரிவிக்க அவகாசம்

Published on

சென்னை: பரந்தூர் விமான நிலையத்துக்காக சிறுவள்ளூர் கிராமத்தில் எடுக்கப்பட உள்ள 43.34 ஏக்கர் நிலம் தொடர்பாக ஆட்சேபணைகளை தெரிவிக்கலாம் என தொழில்துறை தெரிவித்துள்ளது.

சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம், காஞ்சிபுரம் அடுத்த பரந்தூரில் சுற்றிலும் உள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி 5476 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.20 ஆயிரம் கோடி முதலீட்டில் அமைக்கப்படுகிறது. வரும் 2028-ம் ஆண்டில் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த விமான நிலையத்துக்கான பணிகளில் மத்திய, மாநிலஅரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்திவருகின்றனர். இதற்கிடையில் பரந்தூர் விமான நிலையத்துக்கு தேவையான 5746ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக தொழில்துறை அனுமதியளித்து கடந்தாண்டு அக்டோபரில் அரசாணை வெளியிடப்பட்டது.

நிலம் எடுப்புக்காக சிறப்புமாவட்ட வருவாய் அலுவலர்கள், சிறப்பு துணை ஆட்சியர்கள், சிறப்பு தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் உட்பட326 பேர் நியமிக்கப்பட்டுஉள்ளனர்.

இந்நிலையில், தமிழக தொழில்துறை சார்பில் பரந்தூர் விமான நிலையம் அமையும் நிலப்பகுதியில் உள்ள சிறுவள்ளூர் கிராமத்தில் 43.34 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் ஆட்சேபணைகள் இருந்தால் தெரிவிக்க வேண்டும் என்றும். அதன் அடிப்படையில் நில எடுப்பு தாசில்தார் விசாரணை நடத்துவார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in