Published : 18 Feb 2018 03:36 AM
Last Updated : 18 Feb 2018 03:36 AM

அமித் ஷா முன்னிலையில் முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி பாஜகவில் இணைந்தார்

முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ.பொன்னுசாமி அமித் ஷா முன்னிலையில் நேற்று பாஜகவில் இணைந்தார்.

முன்னாள் மத்திய இணை அமைச்சரான இ.பொன்னுசாமி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவருக்கு கட்சியின் உறுப்பினர் அட்டையை அமித் ஷா வழங்கினார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய நிதி, கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.

இணை அமைச்சர்

82 வயதான பொன்னுசாமி, பாமக சார்பில் கடந்த 1999 மற்றும் 2004-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1999-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை வரை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சராக பணியாற்றினார். பாமகவின் பொதுச்செயலாளராகவும் இருந்துள்ளார்.

பின்னர் பாமகவில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், கடந்த 2013-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகியிருந்த நிலையில் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். பாஜகவில் சேர்ந்துள்ள அவரை தமிழகத்தைச் சேர்ந்த அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x