

புதுச்சேரி: புதுச்சேரியில் அமையும் கடலோர காவல் படையின் விமான பிரிவுத் தளம், கடலோர கண்காணிப்பு மையமானது தமிழக, புதுச்சேரி கடலோர மீனவர்களின் பாதுகாப்பு, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை வலுப்படுத்தும் என்று இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் டோனி மைக்கேல் தெரிவித்தார்.
இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்தியத்துக்கு உட்பட்ட புதுச்சேரி மற்றும் மற்றும் தமிழக பகுதியில் அமைந்துள்ள கடலோர காவல்படையின் மாவட்ட தலைமையகத்தை பார்வையிட இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்திய கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் டோனிமைக்கேல் புதுச்சேரிக்கு இன்று வந்தார்.
அவரை புதுச்சேரி மாவட்ட கடலோர காவல்படை கமாண்டர் டஸிலா வரவேற்று புதுச்சேரி பணிகளைப் பற்றி விளக்கம் தந்தார். புதுச்சேரியில் அமைய உள்ள கடலோர காவல் படையின் விமானப் பிரிவு தளம் மற்றும் கடலோர கண்காணிப்பு மையம் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து கிழக்கு பிராந்திய தளபதியிடம் விளக்கமாக எடுத்துரைத்தார்.
அதைத் தொடர்ந்து டோனி மைக்கேல் டோனி மைக்கேல் கூறுகையில், "இந்திய கடலோர காவல் படையில் விமானப் பிரிவு மேம்பாடு என்பது புதுச்சேரி மற்றும் மத்திய தமிழக கடலோர மீனவர்களின் பாதுகாப்பிற்காக தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை வலுப்படுத்த ஊக்கமளிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.