திமுக கூட்டணியில் கைவிரிப்பு: தேர்தலில் யாருக்கு ஆதரவு? - மமக நாளை முடிவு

திமுக கூட்டணியில் கைவிரிப்பு: தேர்தலில் யாருக்கு ஆதரவு? - மமக நாளை முடிவு
Updated on
1 min read

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மனிதநேய மக்கள் கட்சி மக்களவைத் தேர்தலில் தொகுதி ஒதுக்கப்படவில்லை. இதனால், திமுக மீது மமகவினர் அதிருப்தியில் உள்ளனர்.

அதே சமயம், திமுக கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகிக்கும் தங்கள் கட்சிக்கு தொகுதி ஒதுக்காமல், தொடர்ந்து திமுகவை விமர்சித்துவிட்டு, அண்மையில் கூட்டணியில் சேர்ந்த கமல்ஹாசனின் மநீமவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மமகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களிலும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் நிலைப்பாடு குறித்து முடிவெடுப்பதற்காக, மமக அவசர செயற்குழு கூட்டம் அக்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் திருச்சியில் நாளை (மார்ச் 13) கூடுகிறது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் 500 பேர் பங்கேற்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in