

செங்குன்றம்: உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருளை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு கடத்திய வழக்கு தொடர்பாக சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக்கை கடந்த 9-ம் தேதி மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் தலை விரித்தாடும் போதைப் பொருள் நடமாட்டத்தை அறவே அறுக்க திமுகஅரசு தவறிவிட்டது எனக் கூறி, நேற்று திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே சென்னை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு, சிறுபான்மை பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் மாநில தலைவர் லோகநாதன் கண்டன உரையாற்றினர்.