Last Updated : 11 Mar, 2024 12:44 PM

1  

Published : 11 Mar 2024 12:44 PM
Last Updated : 11 Mar 2024 12:44 PM

புதுப்பிக்கப்பட்ட பைக்: தொட்டு ரசித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

பழைய பைக்கை புதுப்பித்த புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி: புதுப்பிக்கப்பட்ட தனது பைக்கை, பிரியமுடன் பயன்படுத்தி வரும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அதனைத் தொட்டு ரசித்தார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தீவிர பைக் பிரியர். குறிப்பாக யமஹா ரக பைக்குகள் மீது சிறு வயது முதலே ஆர்வம் கொண்டவர். ஆரம்பகாலத்தில் அரசியல் பணிகளுக்கு தன்னுடைய யமஹா பைக்கில் தான் அதிகம் செல்வார். வேளாண் துறை அமைச்சராக இருந்த போதும் முதல்வராக இருந்த போதும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் அவர் யமஹா பைக்கில் பல இடங்களுக்குச் சென்றதுண்டு. தொகுதி மக்களை யமஹா பைக்கில் சென்று சந்திப்பது அவரது வழக்கமாக இருந்தது.

இந்நிலையில், அவரது பைக் 6 மாதங்களுக்கு முன் புதுப்பிக்கப்பட சென்னை கொண்டு செல்லப்பட்டது. PY-01F 3966 என்கிற எண் கொண்ட அந்த பைக் சர்வீஸ் முடிந்து முதல்வரின் வீட்டுக்கு இன்று (திங்கள்கிழமை) கொண்டு வரப்பட்டது. புத்தம் புது பொலிவுடன் காணப்பட்ட தனது பைக்கை முதல்வர் ஆசையுடன் தொட்டுப் பார்த்து ரசித்தார். இந்த பைக்கை காண்பதற்கு அவரது ஆதரவாளர்கள் வீட்டில் கூடியிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x