

சென்னை: நாட்டியாஞ்சலி விழாவுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளதாக அண்ணாமலை கூறிய தகவல் உண்மை இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி விழா 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருவதாகவும், இந்த ஆண்டு திமுக அரசு அனுமதி மறுத்திருப்பதாகவும் கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அண்ணாமலை தெரிவித்த தகவல் உண்மை இல்லைஎன தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு எக்ஸ் தளத்தில், ‘நாட்டியாஞ்சலி விழாவை தமிழக அரசு ரத்து செய்யவில்லை. நாட்டியாஞ்சலி விழாவுக்கு அனுமதி மறுத்தது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல் துறை தான்.
தஞ்சை பெருவுடையார் கோயிலில், சிவராத்திரி அன்றுநிகழ்ச்சிகள் நடத்த இந்தியதொல்லியல் துறை அனுமதிமறுத்துள்ளது. ஆகையால்தான், 20 ஆண்டுகளாக நடைபெற்ற நாட்டியாஞ்சலி இந்த ஆண்டு நடைபெறவில்லை. எனவே அண்ணாமலை கூறிய தகவல் உண்மையல்ல’ என குறிப்பிட்டுள்ளது.