

சென்னை: போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக பாஜக அறிவித்துள்ளது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கை டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக திமுக அரசைகண்டித்து பாஜக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
இன்று மாலை செங்குன்றத்தில்.. அதன்படி, செங்குன்றத்தில் இன்று மாலை சென்னை மேற்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு பங்கேற்கிறார்.
நாளை (12-ம் தேதி) சென்னையின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. வள்ளுவர் கோட்டத்தில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் விஜய்ஆனந்த் தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் உட்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதேபோல், தமிழகம் முழுவதும் பாஜகவினர் திமுக அரசைக் கண்டித்து வெவ்வேறு நாட்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.