

திருநெல்வேலி: பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்களவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜாபர் சாதிக் 2,500 கோடி ரூபாய் மதிப்பில் போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பிரபல நடிகர் களுடன் தொடர்பு இருப்பதாக கூறுகின்றனர். யார் குற்றத்தில் ஈடுபட்டாலும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் மதுக் கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் தமிழகத்தில் இருக்கக் கூடாது.
போதை பழக்கத்தால் வருங்கால சந்ததிகள் வீணாகின்றனர். பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அடுத்த பட்டியல் விரைவில் வெளியாகும். திருநெல்வேலி தொகுதியில் நிச்சயமாக பாஜக வேட்பாளர் போட்டியிடுவார். சமத்துவ மக்கள் கட்சியினர் எங்களோடு கூட்டணி பேசிக் கொண்டு இருக்கின்றனர்.
வேட்பாளர் அறிவித்ததும் உடனடியாக பிரச்சாரத்தை தொடங்குவோம். புதுச்சேரி சிறுமி கொலை சம்பவம் மனிதாபிமானமற்ற செயல். இது போன்ற செயல் இந்தியாவில் எங்குமே நடைபெறக் கூடாது. சிறுமி கொலை சம்பவத்தில் தொடர்பு டையவர்களை விசாரணையின்றி தூக்கிலிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.