தமிழக பாஜகவின் தேர்தல் பிரச்சார வாகனம்: எச்.ராஜா தொடங்கி வைத்தார்

தமிழக பாஜகவின் தேர்தல் பிரச்சார வாகனம்: எச்.ராஜா தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

சென்னை: தமிழக பாஜக சார்பில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் செல்லும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா சென்னை அமைந்தகரையில் உள்ள மக்களவை தலைமை தேர்தல் அலுவலகத்தில் நேற்று வைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வளர்ச்சியடைந்த பாரதம், மோடியின் உத்தரவாதம் என்ற செய்தியை தாங்கி, ஒரு மக்களவைத் தொகுதிக்கு 2 வாகனம் வீதம் பிரச்சாரம் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து கருத்துகேட்கும் பெட்டியை அமைக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். வரும் 20-ம் தேதி வரை வைக்கப்படவுள்ள பெட்டியில் பெறப்படும் கருத்துகள் அனைத்தும் நமோ செயலியில் பதிவேற்றம் செய்யப்படும்.

கூட்டணி கட்சிகளை பொருத்தவரை எப்போதும் தேசிய தலைமைதான் பங்கீட்டை பேசி, தொகுதியை ஒதுக்குவார்கள். அதில் எங்களால் தலையிட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in