முதல்கட்டமாக 39 வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ் - ராகுல் மீண்டும் வயநாட்டில் போட்டி

முதல்கட்டமாக 39 வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ் - ராகுல் மீண்டும் வயநாட்டில் போட்டி
Updated on
1 min read

புதுடெல்லி: 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் டெல்லியில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரின் 6 தொகுதிகள், கர்நாடகாவின் 7 தொகுதிகள், கேரளாவின் 16 தொகுதிகள், தெலங்கானாவின் 4 தொகுதிகள், மேகாலயாவின் 2 தொகுதிகள், லட்சத்தீவு, நாகலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுராவின் தலா தொகுதியில் போட்டியிடும் 39 வேட்பாளர்கள் அடங்கிய இந்தப் பட்டியலில் முக்கிய வேட்பாளர்கள் விவரம்:

  • ராஜ்னம்த்லோன் (சத்தீஸ்கர்) - பூபேஸ் பாகல்
  • மாண்டியா - வெங்கட்ராம கவுடா
  • பெங்களூரு (ஊரகம்) - டி.கே.சுரேஷ்குமார்
  • வயநாடு - ராகுல் காந்தி
  • திருவனந்தபுரம் - சசி தரூர்
  • ஆலப்புழா - கே.சி.வேணுகோபால்
  • துர்க் (சத்தீஸ்கர்) - ராஜேந்திர சாஹு
  • திருச்சூர் - முரளீதரன்
  • பத்தனம்திட்டா - ஆண்டோ ஆண்டனி
  • கண்ணூர் - கே.சுதாகரன்
  • ஷிவ்மோகா - கீதா சிவராஜ்குமார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in