திமுக கூட்டணி கட்சிகள் அதிமுகவுக்கு போகமாட்டார்கள்: துரைமுருகன் நம்பிக்கை

திமுக கூட்டணி கட்சிகள் அதிமுகவுக்கு போகமாட்டார்கள்: துரைமுருகன் நம்பிக்கை
Updated on
1 min read

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வேலூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு வழங்கிய மகன் கதிர் ஆனந்த் உடன் அமைச்சர் துரைமுருகன் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வெள்ள பாதிப்பின்போது மக்களுக்கு மாநில அரசு உதவவில்லை என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியவர்கள், பொருள் கொடுத்தவர்கள், சேற்றில் நடந்தவர்களுக்குத்தான் அது பற்றி பேச உரிமை உண்டு. வானத்தில் பறந்து கூட பார்க்காதவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் பாதகம் ஏதும் இல்லை. முடிந்துவிடும். திமுக கூட்டணியில் இருப்பவர்கள் அதிமுக கூட்டணிக்கு போகமாட்டார்கள் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in