Published : 07 Mar 2024 06:06 AM
Last Updated : 07 Mar 2024 06:06 AM

தமிழை வழக்காடு மொழியாக்க தீர்மானம்; வழக்கறிஞர்களின் உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு: அரசின் உறுதிமொழி ஏற்பு

சென்னை: சென்னை, உயர்நீதிமன்றத்தில் தமிழைவழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி, சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் அருகே கடந்த மாதம்28-ம் தேதி வழக்கறிஞர் பகத்சிங் தலைமையிலும், வழக்கறிஞர் பாவேந்தன்ஒருங்கிணைப்பிலும் உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டது.

வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரிமாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என24 பேர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தொடங்கி வைத்தார். இதையடுத்து ஒரு வாரத்துக்கு மேலாக அவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையே, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள்அமைச்சர் ஜெயக்குமார், மார்க்சிஸ்ட்மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததோடு, போராட்டத்தைக் கைவிடவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சட்டத்துறை அமைச்சர்ரகுபதி நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி கடந்த 2006-ம் ஆண்டு தமிழகஅரசு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.

எனவே, மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முதல்வரிடம் பேசிய முடிவெடுக்கப்படும் என அமைச்சர் வாக்குறுதியளித்தார். இதையடுத்து, போராட்டம்தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x