நாட்டை காக்கும் பெரும் பொறுப்பை சுமக்கும் அளவுக்கு திமுகவின் வலிமை கூடியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

நாட்டை காக்கும் பெரும் பொறுப்பை சுமக்கும் அளவுக்கு திமுகவின் வலிமை கூடியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
Updated on
1 min read

சென்னை: அன்று தமிழகத்தை காத்த நிலையில், இன்று நாட்டை காக்க வேண்டிய பெரும் பொறுப்பை சுமக்கும் அளவுக்கு திமுகவின் வலிமை கூடியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டசமூக வலைதளப்பதிவில் கூறியிருப்ப தாவது: மார்ச் 6 - இந்தியாவிலேயே முதன் முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள். பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுகவின் இளம்படை தெற்காசிய ஜனநாயக வரலாற்றில் ஓர் அமைதிப் புரட்சியை நிகழ்த்திக் காட்டிய நாள்.

அன்று தமிழகத்தைக் காத்தோம். இன்றுமொத்த இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையையும் பன்முகத் தன்மையையும் மதச்சார்பின்மையையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பை நம் தோள்களில் சுமக்கும் அளவுக்கு நம் வலிமை கூடி யுள்ளது. மீண்டும் வரலாறு படைப்போம். நாட்டைக் காப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in