"எனது மரணம் சீமான் யார் என்பதை புரிய வைக்கும்" - நடிகை விஜயலட்சுமி பரபரப்பு வீடியோ

"எனது மரணம் சீமான் யார் என்பதை புரிய வைக்கும்" - நடிகை விஜயலட்சுமி பரபரப்பு வீடியோ
Updated on
1 min read

சென்னை: நடிகை விஜயலட்சுமி நேற்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது: கடந்த 2008-ல் எனது மூத்த சகோதரிபிரச்சினைக்காக சீமானிடம் போனோம். சீமானுக்கு அப்போது திருமணம் ஆகவில்லை.

என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 3 ஆண்டுகள் குடும்பம் நடத்தி, என் வாழ்க்கையை சீரழித்தார். அதன்பிறகு, அவருக்கு பிரச்சினை என்று கூறி நடுரோட்டில் என்னை விட்டு சென்றார். என்னை வாழவிடாமல் விபச்சாரி என்ற பட்டத்தை சூட்டி தமிழகத்தில் என்னை அசிங்கப்படுத்தினார்.

தற்போது, கர்நாடகாவில் நான் வாழமுடியவில்லை என்றால், சாவு என்கிறார். அப்படி என்றால் அடுத்தது அதுதான் நடக்க போகிறது. இதுதான் எனது கடைசி வீடியோ. இரண்டுநாள் கழித்து நான் எப்படி இறந்தேன் என்று கர்நாடகாவில் இருந்து தெரிவிப்பார்கள்.

நான் எனது உயிரை மாய்த்துக்கொள்ள போகிறேன். எனது மரணம், சீமான்யார், நாம் தமிழர் கட்சின்னா என்ன என்பதை புரிய வைத்து விடும். அதன்பிறகு, ஒருவர் தமிழகத்துக்கு வேண்டுமா, வேண்டாமா என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in